கண்மணி குணசேகரன் (19.05.1971). இயற்பெயர் அ.குணசேகர். கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வட்டம், மணக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர். சொந்த ஊரில் விவசாயம் பார்த்துக்கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் விருத்தாசலம் பணிமனையில் தொழிலாளியாக வேலை செய்கிறார்.
விழுப்புரம் கடலூர் உள்ளடக்கிய நடுநாட்டு மக்களின் வாழ்க்கையை மண்ணின் மொழியிலேயே 25 ஆண்டுகளுக்கும் மேலாக தனது படைப்புகளில் பதிவு செய்து வருகிறார்.
இதுவரை பத்து கவிதை தொகுப்புகள், ஐந்து நாவல்கள், ஐந்து சிறுகதை தொகுப்புகள், நடுநாட்டுச் சொல்லகராதி, இரண்டு அபுனைவுகள்… என இதுவரை 23 நூல்கள் எழுதியுள்ளார்.
சுந்தர ராமசாமி நினைவாக வழங்கும் நெய்தல் விருது, தமிழ் வளர்ச்சித் துறை விருது, கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் புனைவு விருது, கலைஞர் பொற்கிழி விருது, கிரா விருது ஆகியன பெற்றுள்ளார்.
இவரது நூல்கள் பல்கலைக் கழகங்களில் பாடமாக வைக்கப்பட்டுள்ளன. பல்வேறு தலைப்புகளில் இவரது படைப்புகளை மாணவர்கள் முனைவர் பட்டத்திற்காக ஆய்வு செய்து வருகின்றனர்.
கம்போடியா, ஜப்பான் போன்ற நாடுகளுக்கு இலக்கியப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
மண்மிளிரும் நடுநாட்டு மொழியில் நல்ல உரையாற்றுபவரும் கூட.
குடும்பம்
மனைவி: காசிமணி
மகன்கள்: தமிழ்மதி, அறிவுமதி, இளமதி.
முகவரி:
கண்மணி குணசேகரன்
மணக்கொல்லை
இருளக்குறிச்சி (அஞ்சல்)
பாதூர் வழி
விருத்தாசலம் வட்டம்.
கடலூர் மாவட்டம்.
606115.
அலைபேசி எண்: 9790214515 (Whatsapp)
வலைதளங்களில் பின்தொடர…
Google:https://g.co/kgs/n3o4VYq
Facebook:https://www.facebook.com/profile.php?id=100008194032459&mibextid=ZbWKwL
Facebook (Page):https://www.facebook.com/share/cXwj4yGhKhGAugsC/?mibextid=qi2Omg
Instagram:https://www.instagram.com/kanmani_gunasekaran?igsh=MzNlNGNkZWQ4Mg==
X (Twitter):https://x.com/Kanmani_Guna?t=ceo260hNBsBnauqUsn2DBA&s=08